பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து 25 நாட்கள் பணிக்கு வருகை தந்தால், அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.200 வருகைக்கான கொடுப்பனவு கிடைக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ், தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் ரூ.1,550 ஆகவும், வருகைக்கான ரூ.200 கொடுப்பனவுடன் மொத்தம் ரூ.1,750 நாளாந்த வேதனமாகவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதனை தெளிவுபடுத்திய அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்ததாவது, தொழிலாளர்களுக்கு உரிய வேதனம் கிடைக்காதமையால் பலர் பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறி வருவதாகவும், அதனால் அரசாங்கம் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் கூறினார்.

தற்போது வழங்கப்பட்ட ரூ.1,350 அடிப்படை வேதனத்தில் ரூ.200 அதிகரிப்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதன்படி ரூ.1,550 புதிய அடிப்படை வேதனம் அமுலில் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தொழிலாளர்கள் வருகைக்கான ரூ.200 கொடுப்பனவாக அரசாங்கம் வழங்குவதற்காக ரூ.5,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் 25 நாட்கள் பணியாற்றும் தொழிலாளி ஒருவருக்கு மாதத்திற்கு ரூ.10,000 வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here