Saturday, June 13, 2026
No menu items!

பெருந்தோட்டத் தொழிலாளர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் ரூ.1,750 ஆக உயர்வு !

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து 25 நாட்கள் பணிக்கு வருகை தந்தால், அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.200 வருகைக்கான கொடுப்பனவு கிடைக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ், தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் ரூ.1,550 ஆகவும், வருகைக்கான ரூ.200 கொடுப்பனவுடன் மொத்தம் ரூ.1,750 நாளாந்த வேதனமாகவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதனை தெளிவுபடுத்திய அமைச்சர் வசந்த சமரசிங்க...

வருட இறுதிக்குள் சம்பள உயர்வு – மலையக மக்களுக்கு ஜனாதிபதி உறுதி!

பண்டாரவளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மலையக மக்களின் அடிப்படை தேவைகள், காணி உரிமை, வீட்டு உரிமை மற்றும் நியாயமான சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். அவர் மேலும், மலையக மக்கள் இந்நாட்டின் சம உரிமையுடைய பிரஜைகள் என்றும், அவர்கள் இரண்டாம் தர மக்களாக கருதப்பட...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் உடனடி இணக்கப்பாடு வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான வேதனம் குறித்துப் தொடரப்பட்ட வழக்கில், அரசாங்கம் உடனடியாக தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கப்பாட்டுக்குக் வர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தினரால் இந்த...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடற்றொழில் அமைச்சரின் வாழ்த்துச் செய்தி!

தொழிலாளர் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமாலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, 'இந்த உலகை இயக்கிக்கொண்டிருக்கும் - உலக மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் விசேட கவனம்..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (11/03/2025) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ‘‘தேயிலைச் சட்டத்தை...

பெருந்தோட்டங்களை பிரித்து மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும்; பழனி திகாம்பரம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் வேதனம் பெற்றுத்தரப்படும் என பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துகள் சாத்தியமற்றவை என நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டன் - செனன் தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பெருந்தோட்டங்களை பிரித்துக் கொடுத்து அங்குள்ள மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற...

ஜனாதிபதி மீது குற்றம் சுமத்திய ஜீவன்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை வழங்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் ஜீவன் தொண்டமான் குற்றஞ்சாட்டியுள்ளார். டயகம பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய ஜனாதிபதி இன்றுவரை மலையக மக்களைப் பற்றி எதுவுமே பேசாமல், ஏனையோருக்குச்...

வேதன நிர்ணய சபையின் இறுதி முடிவு..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1700 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற வேதன நிர்ணய சபையில் அந்தத் தொகை 1350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1350 ரூபா என்ற தொகைக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய பிரதான தொழிற்சங்கங்களும் இணக்கம்...

மேலதிக கொடுப்பனவுகளை வழங்க இணங்கவில்லையா? தேசிய வேதன சபை..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகத் தேசிய வேதன நிர்ணய சபை இன்றைய தினம் மீண்டும் தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பான தேசிய வேதன நிர்ணய சபை கடந்த 3 ஆம் திகதி கூடியது. இதன்போது தீர்மானம் எதுவுமின்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700...

மனுவை மீளப்பெற்றுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான தமது மனுவை, பெருந்தோட்ட நிறுவனங்கள் மீளப்பெற்றுள்ளன. இது தொடர்பான வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பெருந்தோட்ட நிறுவனங்கள் தமது தீர்மானத்தை அறிவித்துள்ளன. இதன்படி குறித்த வழக்கினை நிறைவுறுத்துவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img