வடமாகாணத்தில், மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதியர் உத்தியோகத்தர்களின் வருகை மற்றும் புறப்படல் பதிவுக்கு எதிராக, அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளது.
பணிப்புறக்கணிப்பு நாளை காலை 7 மணியில் ஆரம்பித்து, மறுதினம் காலை 7 மணிக்கு முடிவடையும்.
அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் தகவல்படி, இது வடக்கு மாகாணத்திற்கு மட்டுமே அமுல்படுத்தப்படுவதால், மற்ற மாகாணங்கள் அல்லது மத்திய அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற நடைமுறை இல்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது.








