வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஈடுபடவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

“வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபடுவதாகக் கூறப்படுவது தவறு. அத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமானால், அதற்கான ஆதாரங்களையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விவரங்களையும் வெளிப்படுத்த வேண்டும். அப்போது நாங்கள் உரிய விசாரணை மேற்கொள்வோம்,” என்றார்.

மேலும், எதிர்க்கட்சியினர் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களைத் தவறாக வழிநடத்த முயலுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொருளாதார ஒழுக்கத்தைப் பேணும் வகையில் தயாரிக்கப்பட்டதாகவும், மக்களுக்கு போலியான நிவாரணங்கள் வழங்காமல், நிதிசார் நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here