ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாணத்தின் வடக்கு குற்றப்பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை (24) இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும், “ஹோமகம ககனா” என அறியப்படும், வெளிநாட்டில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் கீழ் இந்த சந்தேக நபர் செயல்பட்டு வருவதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here