அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் 2.5 மில்லியன் டொலர் பணம் இணையவழி ஊடாக களவாடப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார மற்றும் பலர் மீது சாணம் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டதால், அமைதியை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here