15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த ஹெவவசம் கடந்த வியாழக்கிழமை (30) அன்று 24 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மொனராகலை, எத்திமலையைச் சேர்ந்த, குற்றம் சாட்டப்பட்ட உருமுத்த கமகே சந்தன (47)2015-ஆம் ஆண்டில் தம்ம பள்ளிச் சிறுவனை மிதிவண்டியில் ஒரு ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, ஒவ்வொரு குற்றச்சாட்டின் கீழும் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தமாக 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 12 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு குற்றச்சாட்டின் கீழும் அவருக்கு ரூ.100,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.500,000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சாதாரண சிறைத்தண்டனையும், இழப்பீடு செலுத்தத் தவறினால் மூன்றாண்டு சாதாரண சிறைத்தண்டனையும் குற்றவாளி அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரச சட்ட ஆலோசகர் துமிந்த டி அல்விஸ் வழக்கை நடத்தினார் (வழக்கை நிரூபித்தார் )என்பதோடு சட்டத்தரணி வசந்த பண்டார குற்றவாளிக்காக ஆஜரானார் என சட்டத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here