சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (06) கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டொலராக அதிகரித்தது.
கொழும்பு கோட்டை தங்கச் சந்தையில் இன்று காலை 8.00 மணி வரையான நிலவரப்படி 7,000 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதற்கமைய 22 காரட் தங்க பவுனின் விலை ரூ. 363,400 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று ரூ. 388,000 ஆக இருந்த ஒரு 24 காரட் தங்க பவுனின் விலை, இன்று ரூ. 395,000 ஆக அதிகரித்துள்ளது.








