நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஏழு (07) மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 489 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 நபர்கள் எட்டு (08) தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கில் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இன்று (14) காலை 10.00 மணி நிலவரப்படி, மொத்தம் 88 வீடுகளும் ஒரு வணிக நிறுவனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here