இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வரிவிதிப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வருவதுடன் குறித்த வரி விதிப்பு மூன்று மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் பெறப்பட்ட வாகனங்களுக்கு குறித்த மேலதிக 50 சதவிகித வரி விதிக்கப்படாது என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here