களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை (16) சம்பவித்த ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் இல்லத்திலிருந்து பல கருவிகள் மற்றும் ரயில்வே உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ரயில் தண்டவாளங்களை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் மூன்று இரும்பு நெம்புகோல்களும், அவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கருவிகளும் சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு, மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வனவாசல பகுதியைச் சேர்ந்த 27 வயதான குறித்த சந்தேக நபர், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ரயில்வே பாகங்களை அகற்றியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







