வாகன இறக்குமதிகள் மீதான அரசாங்கத்தின் 50% மேலதிக கட்டண அறிவிப்பைத் தொடர்ந்து வாகனங்களின் உத்தேச விலை அதிகரிப்புகளை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) அறிவித்துள்ளது.

மேலதிக கட்டணம், நாணய மதிப்பு அதிகரிப்பு மற்றும் ஏற்கனவே உள்ள வரிகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்தால், வாகனங்களின் விலையானது அதன் மாதிரியை பொறுத்து 1.5 மில்லியன் ரூபாய் முதல்2.5 ரூபாய் மில்லியன் வரை அதிகரிக்க கூடும் என அந்த சங்கம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

பல்வேறு பிரிவுகளில் விலை அதிகரிப்புகள் ஏற்பட்டதன் காரணமாக வாகனங்களின் விலைகளில் ஏற்படக்கூடிய மாற்றத்தை அச்சங்கம் மதிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, மினி கார்கள் / கெய் கார்கள்: ஆல்டோ/கரோல் ஆகியன 421,750,ரூபாவாகவும், ஆல்டோ/கரோல் ஹைப்ரிட் – ரூ. 542,250 ஆகவும், வேகன்ஆர்/ஃப்ளேர் – ரூ. 482,000 ஆகவும், வேகன்ஆர்/ஃப்ளேர் ஹைப்ரிட் – 602,500 ரூபாவாகவும், டேஸ் ஹைவே ஸ்டார் – 662,750 ரூபாவாகவும், EK X – 723,000 ரூபாவாகவும், கம்பெக்ட் கார்கள்: பாசோ/பூன் – 542,250 ரூபாவாகவும், யாரிஸ் – 602,500 ரூபாவாகவும் விலை அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஆக்சியோ ஹைப்ரிட் –903,750 ரூபாவாகவும், எஸ்யூவிகள் / ஹைப்ரிட் எஸ்யூவிகள்: ரைஸ்/ரொக்கி/ரெக்ஸ் ஹைப்ரிட் 903,750 ரூபாவாகவும், வெஸல் எக்ஸ் – 1,084,500ரூபாவாகவும், வெஸல் இசட் – 1,205,000 ரூபாவாகவும், வெஸல் இசட் ப்ளே 1,325,500 ரூபாவாகவும் மேலதிகமாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய குறிப்பிடத்தக்க வரிச்சுமையை சங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும், இதன் தாக்கம் தவிர்க்க முடியாமல் நுகர்வோர் மீது சுமத்தப்படும் என்றும் சங்கத்தின் செயலாளர் (VIASL) உஸ்மான் அலி சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலர், யென் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் ஆகியவற்றின் மதிப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது.அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை மேலும் (SSCL) 2.5% அதிகரித்ததுள்ளது, தற்போது 50%மேலதிக கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here