உடவளவ பொலிஸ் பிரிவின் பஹனகடுவ பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது, 26.770 கிலோ கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு , கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (28) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இடம்பெற்ற கால்நடைத் திருட்டுச் சம்பவங்களுடனும் இந்த சந்தேக நபர்களுக்குத் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் பல்லேபெத்த மற்றும் தனமல்விலவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 26, 31, 37 மற்றும் 46 வயதினர் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
அவர்கள் தற்பொழுது காவலில் எடுக்கப்பட்டுள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பாக உடவளவ பொலிஸ் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








