ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக, ஹொங்கொங் நாட்டின் பல நிறுவனங்கள்/அமைப்புகள் மீது அமெரிக்கா இந்த வாரம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஈரான் தனது இராணுவத்திற்காக பணம் ஈட்டுவதை நிறுத்த முயற்சிப்பதாக தெரிவித்து அமெரிக்கா இவ்வாறு பொருளாதார தடை விதிப்பதாக கூறியுள்ளது.
இதற்கமைய நேற்று வியாழன், 28,அன்று 15க்கும் மேற்பட்ட ஹொங்கொங் நிறுவனங்களை அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது.
ஈரானின் இராணுவ எண்ணெய் நிறுவனத்திற்காக எண்ணெய் பொருட்களை கொள்வனவு செய்ததாக தெரிவித்து
‘வொர்த் சீன் எனர்ஜி லிமிடெட்’ நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
அதேபோல ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்றொரு ஹொங்கொங் நிறுவனமான ‘மெஹ்தியேவ் டிரேடிங் கோ’ மீதும் தடை விதித்துள்ளது.
இதேவேளை ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றும் ஒரு எரிவாயு கப்பலை நிர்வகித்த ஒன்போர்ட் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனம்,ஈரானிய எண்ணெயை ஏற்றிச் சென்ற கப்பல்களின் உரிமை நிறுவனமான எவர் ஷைனிங் லிமிடெட், 2024-2025-ல் ஈரானிய எண்ணெயை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பலை நிர்வகித்த ஹெச்.கே. யுவான்ஹாங் ஷிப்பிங் நிறுவனம் ஆகியவையும் அமெரிக்க தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.








