இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஹிஸ்புல்லா பிரதிநிதிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பிறகு, தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்டிற்குள் இஸ்ரேலியப் படைகள் நுழையாது என்றும், அனைத்துத் துப்பாக்கிச் சூடுகளும் நிறுத்தப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். பெய்ரூட்டின் தஹியே மாவட்டத்தைத் தாக்குவோம் என்ற இஸ்ரேலின் அச்சுறுத்தல் மற்றும் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு விடுத்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெய்ரூட் தாக்கப்பட்டால் வடக்கு இஸ்ரேல் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்று ஈரான் இராணுவம் எச்சரித்தது. எந்தவொரு அமெரிக்க ஒப்பந்தத்திற்கும் லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் ஒரு “அத்தியாவசிய நிபந்தனை” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது, எனினும் எந்தவொரு மீறலும் ஒப்பந்தத்தை முறிக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையிலேயே ட்ரம்ப் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டதாக வரும் செய்திகள் குறித்துத் தாம் “கவலைப்படவில்லை” என்றும் ட்ரம்ப் மேலும் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here