ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு, அறிவிக்கப்பட உள்ள திகதியில் மூன்று நாள் அரச இறுதி மரியாதை செய்யப்படும் என ஈரான் குறிப்பிட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு போரின் முதல் நாளில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவராகவிருந்த அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.

அவருக்கான இறுதி மரியாதை நிகழ்வு மார்ச் 4 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மூன்று நாள் பொது இறுதிச் சடங்கு திட்டமிடப்பட்டுள்ளது,” என்று தெஹ்ரான் துணை மேயர் முகமது அமின் தவாகோலிசதே கூறியதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இறுதி மரியாதை நிகழ்வு நடைபெறும் திகதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அது முஹர்ரம் மாதத்தின் தொடக்கத்தில் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

கமேனி இறுதி மரியாதை செய்யப்படவுள்ள புனித நகரங்களான கோம் மற்றும் மஷ்ஹத் ஆகிய இடங்களிலும், தெஹ்ரானிலும் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைபெறும் என்று தவாகோலிசதே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“தெஹ்ரானில், இந்த விழா குறைந்தது 24 மணிநேரம் நீடிக்கும்,” என்று குறிப்பிட்டுள்ள அவர் , இந்த நிகழ்வில் 20 மில்லியன் மக்கள் வரை இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here