நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்பொழுது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளை விஜயின் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் ஜீவி பிரகாஷ், சிபிராஜ், குஷ்பு போன்ற திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.








