வடக்கு வெனிசுலாவை புதன்கிழமை (24) மாலை ஏற்பட்ட”இரட்டை பூகம்பம்” எனப்படும் நில அதிர்வுகளால் குறைந்தது 235 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேநேரம் இந்த பாதிப்பினால் 4,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணி தொடரும் நிலையில் உயிரிழப்புக்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் USGS எச்சரித்துள்ளது.
வெனிசுலாவில் 39 வினாடியில் இரண்டு அதிர்வுகள் ஏற்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக சான் பெலிபே அருகே பதிவான நிலையில் 39 வினாடிகளுக்கு முன்னதாகவே யுமாரே அருகே 7.5 ரிக்டர் அளவிலான இரண்டாவது அதிர்வு தாக்கியுள்ளது. குறித்த இரண்டாவது அதிர்வு பாரிய அநர்த்தமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் அதிர்வு ஒரு பிளவில் இருந்த அழுத்தத்தை விடுவித்து, அதை அருகாமை பிளவுக்கு மாற்றியதால் இரண்டாவது பூகம்பம் உடனடியாக தூண்டப்பட்டதாக புவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற இரட்டை பூகம்பம் (Doublet) மிகவும் அரிதானது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பூகம்பம், கடந்த 1900-ம் ஆண்டு 7.7 ரிக்டர் அளவில் வெனிசுலாவை தாக்கியதற்கு பின்னர் பின்னர் நாட்டை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும். அதிர்வின் தாக்கம் வலுவாக இருந்ததால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொலம்பியா மற்றும் வடக்கு பிரேசில் பகுதிகளிலும் மக்கள் அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








