சிறுவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான சட்ட வரைவு தொடர்பான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 13 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பெற்றோரின் மேற்பார்வையின் கீழும், குறிப்பிட்ட கால வரம்புகளுடனும் மாத்திரமே சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இதற்காக நிபுணர்களின் ஆலோசனைகளையும் பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








