திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஐக்கியமக்கள் சக்தி கட்சியானது ஆராயவுள்ளது.

இது தொடர்பான கட்சியின்கூட்டம் இன்று (08) இடம்பெறவுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான  ரஞ்சித் மத்துமபண்டார பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் இச் சட்ட திருத்தங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என தீர்மானிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆராய்வதற்கான கட்சியின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்தும் ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here