வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நேற்று (08) மாலை நடைபெற்றுகொண்டிருந்த போது  பதற்றநிலை அதிகரித்ததுள்ளதுடன் இதனால் பலர் கைதுசெய்யப்பட்டு தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுகொண்டிருந்த போது பொலிஸார் மாலை ஆறுமணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் தொடர்ந்தும் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழநிலை ஏற்பட்டது.

அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளி்ட்ட பலர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் வழிபாடுகளில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தநிலையில் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

ஆலய நிர்வாகத்தினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் பூஜை வழிபாடுகள் நீதிமன்ற அனுமதியுடன் நடத்தப்பட்டவை என குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்து பூசகர் உள்ளிட்ட இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here