அம்பாந்தோட்டை – பெலியத்தை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தையை வெட்டிக் காயப்படுத்திய கும்பல், 12 வயதுடைய மகனை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

சம்பவத்தில் 38 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் பெலியத்தை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காணித் தகராறு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைச் சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here