Sunday, April 19, 2026
No menu items!

அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டையில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

அம்பாந்தோட்டை  - தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (30) இடம்பெற்றுள்ளது. செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள...

3.7 பில்லியன் டொலர் பெறுமதியில் சினோபெக் சுத்திகரிப்பு நிலையம்..!

அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள சீனாவின் முன்னணி உலகளாவிய பெட்ரோலிய நிறுவனமான சினோபெக்கினால் 3.7 பில்லியன் டொலர் பெறுமதியான சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேலதிகமாக 200 ஏக்கர் நிலம் கோரப்படுவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கேடிஎம்யு ஹேமபாலவின் கூற்றுப்படி, சினோபெக் மற்றும் சீன அரசாங்கத்திடம் இருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன, இதில்...

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிறுவ திட்டம்!

அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான சீனாவின் சினோபெக்குடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் இதேபோன்ற வசதியை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமீபத்தில் சீனாவிற்கு விஜயம் செய்தபோது, உலகின் முன்னணி பெட்ரோலிய மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சினோபெக்குடன்...

மத்திய வங்கியின் புதிய திட்டம் அறிமுகம்!

இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக எதிர்காலத்தை வடிவமைத்தல்' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையில் அம்பாந்தோட்டை மாகம் ருகுணுபுர நிர்வாக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நிலையான மற்றும் நிதி...

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு..!

அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ, மெதஆர பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது. அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் நேற்றைய தினம் வயலில் உழுதுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 234,083 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -52,170 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-26,268 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-18,297 சர்வஜன சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-5,564

யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இளைஞன் கைது!

அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொரேவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவர் வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது...

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த தாயார் தனது வீட்டின் ஜன்னலில் துணியை பொருத்துவதற்காகச் சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, உயிரிழந்த தாயாரின் இரண்டரை வயது குழந்தை, இரும்பு...

காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாந்தோட்டை மத்தல, அலுத்கம்ஆர, அனுக்கங்கல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03.10.2024) மாலை இடம்பெற்றுள்ளது. தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது வீதியிலிருந்த காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திலிருந்த கணவன் தன் உயிரைப் பாதுகாப்பதற்காக...

தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு ஒன்பது அரச அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒன்பது அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்குவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி எம்.பி.சுமணசேகர உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பத்து அரச அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்,...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img