மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினையால் நாடு முழுவதிலும் உள்ள பல புற வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்பிற்கு தேவையான அளவிற்கு மருத்துவர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கருத்தாக உள்ளமை குறிப்பித்தக்கது.

இதற்கமைய மருத்துவமனைகளிற்கு நியமிக்கப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காததால் நாட்டின் மருத்துவதுறையில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளதாக ஊடக பேச்சாளர் வைத்தியர் சமால் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here