சென்னை விமான நிலையம் உட்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றையதினம் (02.06.2024) சென்னையில்   மக்கள் நடமாட்டம் கூடிய   பிரதேசங்களான சென்னை விமான நிலையம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ கட்டிடம், நந்தனம் ஒய்எம்சிஏ வளாகம் என 3 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என  அந்தந்த  அலுவலகங்களுக்கு Email மூலம் மிரட்டல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் பொலிசார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

எனினும் மிரட்டல் விடுக்கப்பட்ட எந்த இடத்திலும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையடுத்து  புரளியை கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சைபர்க்ரைம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பித்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here