வவுனியா நெடுங்கேணி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பொலிஸாரின் வண்டி வீட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

குறித்தசம்பவம் நேற்று மாலை நெடுங்கேணி  நகரப்பகுதியில் இடம்பெற்றது.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

நேற்று மாலை முல்லைத்தீவு புளியங்குளம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப்ரக வாகனம் திடீர் என கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வீட்டிற்குள் சென்று விபத்திற்குள்ளாகியது.

இதனால் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்தது, வீட்டு உரிமையாளரது மோட்டார் சைக்கிளும் முழுமையாக சேதமடைந்துள்ளது.

இதேவேளை குறித்த வீட்டில் தனியார் வகுப்புக்கு வந்த 20க்கு மேற்பட்ட சிறுவர்கள் விபத்து இடம்பெறுவதற்கு முன்பு அவ்விடத்திலிருந்து சிறிது நேரத்திற்கு முன்பே வீட்டின் உட்பகுதிக்கு சென்றிருந்தமையினால் உயிர் ஆபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வாகனத்தை புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே செலுத்தி வந்ததாகவும், அவரும் ஏனையோரும் மதுபோதையில் இருந்ததாகவும் வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பான் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here