பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் பாலியல் கொடுமைகள் அதிகரிப்பதற்கு பெற்றோரின் பொறுப்பின்மையும் காரணமாகவுள்ளதாகவும் குறித்த பணியகம் தெரிவித்துள்ளது.

எனவே, சமூக வலைத்தளங்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெற்றோர்கள் புரிந்துக்கொள்வது மிகவும் அவசியம் என குடும்ப சுகாதாரப் பணியகம் மேலும்  வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here