ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

அவரை கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க பொலிஸார் அனுமதிக்காத நிலையில் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர தனது கடமைகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்படக்கூடும் எனக் கருதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும் கட்சியின் சட்டபூர்வமான பொதுச் செயலாளராக தாம் இன்னமும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here