வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு பெருவிழா இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்-முரளீதரன்  தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ,மாவட்டத்தின் கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் ஆடிப்பிறப்பு நிகழ்வை அலங்கரித்தன தொடர்ந்து ஆடிக்கூழும் பரிமாறப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here