கிளிநொச்சி பளை கச்சார் வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ஏலம்போயுள்ளது.
வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ விஞ்ஞாபனம் 13.07.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் 5ம் திருவிழாவான மாம்பழத்திருவிழா 17.07.2024 இன்று நடைபெற்றுள்ளது .
வசந்தமண்டப பூசைகள் நிறைவுபெற்றதும் விநாயகப்பெருமானின் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழங்கள் இரண்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
பக்த்தர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 6 இலட்சம் வரை சென்றுள்ள நிலையில் கச்சார்வெளியினைசேர்ந்த அரியகுட்டி வள்ளிப்பிள்ளை பூலோகம் குடும்பத்தினர் அதனை ஆறு இலட்சம் ரூபாவிற்கு பெற்றுள்ளார்கள்.








