நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நாட்டிலிருந்து 40 முக்கியமான பாதாள உலக உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று அவர்கள் டுபாய் மற்றும் பிரான்ஸ் நாட்டில் தற்போது தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவர்கள் அனைவரும் பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களாவர். வெவ்வேறு காலப்பகுதியில் இவர்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களைக் கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here