எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்குத் தயார் என நிதியமைச்சானது இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நேற்று புதன்கிழமை (17.07) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்குமான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தேர்தல் நோக்கங்களுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளதுடன் நிதி ஒழுக்கத்தின் வலுவான நடைமுறையின் காரணமாக அரசாங்கம் நிதியை விநியோகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான தபால்கள், அச்சிடுதல் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நிதி முன்னுரிமை அளிக்கப்படும்.மற்ற செலவுகளுக்கான நிதி தேவைக்கேற்ப விடுவிக்கப்படும் என்று சியம்பலாபிட்டிய கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here