மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர்.
ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவாசிகளின் படகே கவிழ்ந்துள்ளது என I.O.M தெரிவித்துள்ளது.
மேலும் நீண்ட மீன்பிடிபடகொன்றில் 300 பேர் பயணம் செய்தனர் எனவும் அவர்களது படகு ஏழு நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.








