கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வறக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.
தனது தாய் வீட்டில் இல்லாததை அவதானித்த மகள் தாயை தேடியுள்ளார் இதன்போது, வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றிற்குள் தாய் சடலமாக கிடப்பதை கண்ட மகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வறக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








