எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ல என அறிவித்துள்ளது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எங்களின் அதரவை வழங்கப்போவதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவரும், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்  ராஜபக்ஸ குடும்பம் மாத்திரம் இல்லை, கட்சியின் அரசியல் குழுவும் இந்த தீர்மானத்தை இன்றைய தினம் எடுத்துள்ளது. எந்த விதத்திலும் ரணில் விக்ரமசிங்க எங்கள் வேட்பாளர் கிடையாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரணில் எமக்கானவர் அல்ல. மிக மகிழ்ச்சியான செய்தி. எமது வேட்பாளரின் பெயர் இன்று முன்மொழியப்பட்டது. இது குறித்த எமது இறுதி தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here