ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தரப்புக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையில் சற்று முன்னர் பத்திரமுல்லையில் அமைந்துள்ள வாட்டர் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவும்  இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தயாசிறி ஜயசேகர தரப்பு தீர்மானித்த நிலையில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதே வேளை நாளைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இத்தரப்பு கையெழுத்திட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here