கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, நாளை (10.08) முதல் பதினொரு நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலும் மற்றும் அதனைச் அண்மித்துள்ள  அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெரஹரா வீதி பவனி வரும் 10ம் திகதி தொடக்கம் 20ம் திகதி பெரஹரா  தினத்தன்று வரை மதுபானக்கடைகள் மூடப்படும் எனவும், மேலும் குறித்த அக்காலப்பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மதுபானம் விற்பனை செய்வதுடன் மதுபானம் அருந்த அனுமதி வழங்க முடியாது எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கண்டி நகர எல்லையிலுள்ள இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை இந்த காலப்பகுதியில் மூடுமாறு கண்டி மாநகர சபை அறிவித்துள்ளது.

கண்டி நகரிலிருந்து யாசகம் கேட்பவர்கள் மற்றும் தெருநாய்கள் என்பனவற்றை அகற்றுவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் திருமதி இந்திகா அபேசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here