வெனிசுவெலாவில் சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் சமூக ஊடகம் (X) 10 நாட்களுக்கு முடக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ வியாழக்கிழமை (08) அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது,

வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்னர் டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த  தீர்மானத்திற்கு அமைய நான்  கையெழுத்திட்டுள்ளேன் எனவும்  தெரிவித்துள்ளார்.

மேலும், ’எக்ஸ் சமூக ஊடகம் 10 நாட்களுக்கு வெனிசுலாவிலிருந்து வெளியேறு’ என அவர் கூறியுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here