சீனாவின் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தால் ஒரு கி.மீ. தொலைவுக்கு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
உலகின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றான சீனாவின் நிங்போ-ஜூஷான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, யாங்மிங் மெரைன் ட்ரான்ஸ்போர்ட் கோர்ப்ரேஷனுக்குச் சொந்தமான ஒய்எம் மொபிலிட்டி சரக்குக் கப்பலில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருந்துள்ளன.
இந்த நிலையில், இன்று (09.08) பிற்பகல் 1. 40 மணியளவில் குறித்த சரக்குக் கப்பலில் எதிர்பாராத விதமாக திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கப்பலிலிருந்த சரக்குகள் வெடித்து வீசப்பட்டதுடன், கரும்புகையும் வெளியேறியுள்ளது. ஆனால், இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
இருப்பினும், துறைமுகத்திலிருந்த ஓர் அலுவலகத்தின் கதவு, ஜன்னல்கள், உணவு விடுதி ஒன்றின் மேற்கூரை ஆகியன இடிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








