பிக்பாஸ் மூலம் புகழ் பெற்று பின் பிரபல  நடிகராக  மாறிய ஆரவ்வின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படத்தின் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருவதுடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் ஆரவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதில் அஜித் காரை வேகமாக ஓட்டி செல்ல, அவரது அருகில் ஆரவ் காயங்களுடன் கட்டப்பட்டு இருந்தது போன்ற மேக்கிங் காணொளிகள் அண்மையில் வெளியாகியுள்ளன.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்ததுடன் தற்போது படத்தின் போஸ்ட்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே பலத்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here