சிகிச்சைக்காக சென்ற ஆண் ஒருவரின் வயிற்றுக்குள் கருப்பை இருப்பதைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி என்பவர் ஒரு வாரமாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரின் வயிற்றுக்குள் முழுமையாக வளர்ச்சி பெறாத நிலையில் கருப்பையுடன் கரு முட்டை காணப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த வைத்தியர் வயிற்றில் இருந்த கருப்பையை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.







