நால்ல, கீலம்பிட்டிய பிரதேசத்தில் மா ஓயாவினை  கடக்க முற்பட்ட நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மற்றுமொரு நபருடன் மா ஓயாவை கடக்க முற்பட்டபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here