மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது மோதி மூவர் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு தொழில் நிமித்தம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் முந்தலம் வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி பயணிகளை ஏற்றும்போது முச்சக்கரவண்டி பின்பக்கம் வேகமாக வந்து மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here