மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் நேற்று (13.08) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பிரதான வீதி மீரா பாலிகா மகளிர் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை தலைக்கவசமின்றி செலுத்தி வந்த இரு இளைஞர்கள் முன்னாள் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 20 வயதுடைய சஹ்ரான் முஹம்மது சமல்கான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.ஏனைய மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







