மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் விருப்பமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் நேற்று (14.08)பிற்பகல் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும் மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞர்கள் மியாவாடி நகரில் உள்ள சைபர் அடிமை முகாமில் வைக்கப்பட்ட நிலையில் பல்வேறு இணைய குற்றங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, 8 இலங்கையர்கள் இதேபோன்ற நிலைமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். இதன்படி மேலும் சுமார் 30 பேர் மியாவாடி நகரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இணைய அடிமை முகாமில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும் இலங்கையர்களை விடுவிக்கும் முயற்சிகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here