இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐஎன்எஸ் மும்பை’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (26.08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இது வேகமான போர்க்கப்பல் மற்றும் 163 மீட்டர் நீளம் கொண்டதாகும். குறீத்த கப்பலில் ஊழியர்கள் 410 பேர் உள்ளனர்.

இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் நாட்டின் பல முக்கிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு கடற்படைக் கப்பலும் இலங்கை கடற்படைக் கப்பலுடன் கடற்பகுதியில் பயிற்சியை மேற்கொண்டுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தீவை விட்டுச் செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here