ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் பொருளாதார மீட்சியை நிலைநிறுத்துவதற்கும் நீண்ட கால வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்துடன்  உடன்படிக்கையை கடைப்பிடிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதபோது “நான் கிரீஸைப் போல இருக்க விரும்பவில்லை, அவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர், பின் தேர்தல் நடத்தினர், பின் வாக்கெடுப்பு நடத்தினர், அங்கு 60% ஒப்பந்தத்தை நிராகரித்தனர், பின் பொருளாதாரம் மீண்டும் சரிந்தது, “அவர்கள் பழைய நிலையடைய 10 ஆண்டுகள் ஆனது. மீட்பு முடிந்தவரை விரைவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், அதைத்தான் நாங்கள் அடைந்துள்ளோம்.”

2042 வரை நீட்டிக்கப்பட்ட சுமார் 10 பில்லியன் டாலர் வட்டி நிவாரணம் உட்பட, IMF உடன்படிக்கை குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்குகிறது என்று விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டம், பொது நிதிச் சட்டம், மத்திய வங்கிச் சட்டம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டம் உள்ளிட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தேவையான நான்கு முக்கிய சட்டங்களை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றிவிட்டோம். இப்போது முதல் முறையாக கொள்கைகள் சட்டமாக்கப்பட்டுள்ளன. அதனால் அதை மாற்ற முடியாது. அமைச்சர் மாறினாலும் அல்லது ஜனாதிபதி மாறினாலும் அல்லது பிரதமர் மாறினாலும் அதை மாற்ற முடியாது” என்று விக்ரமசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here