தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்றைய தினம் 09.09.2024 தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கசிப்பு உற்பத்தியில் மேற்கொண்ட சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அதனை அடுத்து அப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கோடா 2040 லிட்டரையும் போலீசார் அப்பகுதியில் அளித்துள்ளனர்.
அத்துடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளதாக தர்மபுரம் பொறுப்பு அதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.








