தோனிக்கு விஜய் சார் 'All the Best for the Finals' என வாழ்த்து கூறிவிட்டுச் செல்வதை போன்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன். ஆனால்.... - வெங்கட் பிரபு நெகிழ்ச்சி

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'GOAT' திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து X தளத்தில் ஒரு ஸ்பேஸில் வெங்கட் பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஸ்பேஸில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே நடிகர் அஜித் வெங்கட் பிரபுக்கு அலைபேசியில் அழைத்த சுவாரஸ்ய சம்பவமும் நடந்தியிருந்தது.

வெங்கட் பிரபு பகிர்ந்துகொண்ட முக்கியமான விஷயங்களாக, 'விஜய் சாரிடம் இரண்டு விதமான க்ளைமாக்ஸை சொல்லியிருந்தேன். ஆனால், விஜய் சாருக்கு சிஎஸ்கே மேட்ச்சின் போது நடக்கின்ற க்ளைமாக்ஸ்தான் பிடித்திருந்தது. ஒரு விளையாட்டுப் போட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமே ஒன்லைனாக வைத்தே கூட முழு நீள திரைப்படங்கள் வந்திருக்கிறது. 'Final Score' மாதிரியான படங்களை நானும் பார்த்திருக்கிறேன். இன்ஸ்பிரேஷன் என்பதைக் கடந்து நம்முடைய ரசிகர்களுக்குப் பிடித்தபடி என்னுடைய பாணியில் என்னுடைய திரைக்கதையாக எப்படி இதை வடிவமைக்கிறேன் என்பதே முக்கியம்.

க்ளைமாக்ஸில் தோனியையும் விஜய் சாரையும் ஒரு ஃப்ரேமிலாவது ஒன்றாக காட்டிவிட வேண்டும் என நினைத்தேன். தோனிக்கு விஜய் சார் 'All the Best for the Finals' என வாழ்த்து கூறிவிட்டு செல்வதைப் போன்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன். ஆனால், தோனியை எங்களால் அழைத்து வர முடியவில்லை என வெங்கட் பிரபு பேசிக்கொண்டிருந்த போதே அவருக்கு ஒரு அழைப்பு வந்ததால் ஸ்பேஸிலிருந்து வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here