இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் மூலம் முகாமை செய்யப்படும் மீன்பிடித் துறைமுகங்களின் படுகைகளில் காணப்படும் மணலை அகற்றுவதற்காக கருத்திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் 22 மீன்பிடித் துறைமுகங்களில் மணலை அகற்றுவதற்கான விருப்பு மனுக்கோரல்களைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 2024.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தால் முகாமை செய்யப்படும் மீன்பிடித் துறைமுகங்களின் படுகைகளில் அகழ்வுச் சேவைகளை கட்டண அறவீடுகளின்றி மேற்கொள்வதற்கும், கிரிந்த, சிலாபம் மற்றும் வாழைச்சேனை போன்ற மீன்பிடித் துறைமுகங்களில் அகழ்வு செய்யப்பட்ட மூலப்பொருட்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கான கருத்திட்ட முன்மொழிவுக்கான விருப்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்கு 03 கம்பனிகள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதுடன், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய கிரிந்த, சிலாபம் மற்றும் வாழைச்சேனை போன்ற மீன்பிடித் துறைமுகங்களில் கட்டண அறவீடுகளின்றி அகழ்வுகளை மேற்கொள்கின்ற ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் கம்பனிக்கு வழங்குவதற்காக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here